சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: ஜூலை 22 வரை விளக்கமறியல் நீடிப்பு!
Ad Space
Ad Space
ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) நிராகரித்துள்ளது.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதை நியாயப்படுத்துவதற்கான எந்தவொரு விதிவிலக்கான காரணங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த பிணை மனுவை நிராகரித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபரை வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ad Space
Ad Space