நடை​பாதைகள், மிதிவண்​டிப் பாதைகள், பூங்​காக்​கள் உள்​ளிட்ட பல் வேறு வசதி​களு​டன் கூவம் ஆற்​றங்​கரையை அழகுபடுத்​தும் வகை​யில் 3 இடங்​களில் மேம்​பாட்​டுப் பணி​களுக்கு டெண்​டர் கோரப்​பட்​டுள்ளது.

நீண்​ட​கால​மாக ஆக்​கிரமிப்​பு​கள், கழி​வுநீர் கலப்பு மற்​றும் மாசு​பாடு உள்​ளிட்ட பிரச்​சினை​களால் பாதிக்​கப்​பட்​டுள்ள கூவம் ஆறு சீரமைக்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​திருந்​தார். இதன் தொடர்ச்​சி​யாக, கூவம் ஆற்​றைச் சீரமைத்​து, அதன் கரைகளை அழகுபடுத்​து​வதற்​கான முதற்​கட்ட நடவடிக்​கைகளைத் தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது.

அந்​தவகை​யில், இதற்​காக விரி​வான திட்ட அறிக்​கை​யைத் தயாரிக்க ஆலோ​சனை நிறு​வனங்​களிடம் இருந்து ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் கோரப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக வெளி​யிடப்​பட்​ட டெண்​டர் அறி​விப்பு: சென்னை நதி​கள் சீரமைப்பு நிறு​வனம் சார்​பில், தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​கட்​டமைப்பு நிதிச் சேவை நிறு​வனம் மூலம் இந்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இதன்​படி, நேப்​பியர் பாலம் முதல் கூவம் முகத்​து​வாரம் வரை 0.5 கிமீ, சுவாமி சிவானந்தா சாலை முதல் பெரி​யார் பாலம் வரை 1.2 கிமீ, இணைப்​புச் சாலை முதல் டாம்ஸ் சாலை வரை 2 கிமீ என 3.7 கிமீ தொலை​வுக்கு மேம்​பாட்​டுத் திட்​டம் தயாரிக்​கப்பட உள்​ளது.

தேர்வு செய்​யப்​பட்ட பகு​தி​களில் ஆற்​றின் நீரோட்​டம், வெள்ள அபா​யம், ஆக்​கிரமிப்​பு​கள், கழி​வுநீர் கலக்​கும் இடங்​கள், மண்​ணின் தாங்​கும் திறன் மற்​றும் ஏற்​கெனவே உள்ள கட்​டமைப்​பு​கள் பற்றி ஆய்வு மேற்​கொள்​ளப்​படும்.

இதன்படி ஆற்​றங்​கரை பாது​காப்​பு கட்​டமைப்​பு​கள், நடை பாதைகள், மிதிவண்​டிப் பாதைகள், பூங்​காக்​கள், பொழுது​போக்கு இடங்​கள் உள்ளிட்ட திட்​டங்​கள் தயாரிக்​கப்படும்.

மேலும், ஆற்​றில் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்​த​வும், இயற்​கைச்சூழலைப் பாது​காக்​க​வும் தேவை​யான தீர்​வு​கள் பரிந்​துரைக்​கப்​படும். ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்ட நாளி​லிருந்து 30 நாட்​களுக்​குள் விரி​வானதிட்ட அறிக்​கை​யைத் தயாரித்​துச்சமர்ப்​பிக்க வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதல் 21 நாட்​களுக்​குள் வரைவு அறிக்​கை, பொறி​யியல் வடிவ​மைப்​பு​கள் மற்​றும் செலவு மதிப்​பீடு​களைச் சமர்ப்​பிக்க வேண்​டும். அடுத்த 9 நாட்​களுக்​குள் இறுதி அறிக்​கை, அளவுப் பட்​டியல் மற்​றும் செய​லாக்​கத் திட்​டத்​தைச் சமர்ப்​பிக்க வேண்​டும்.

இந்​தப் பணிக்​கான ஒப்​பந்​தப்​புள்ளி ஆவணங்​களை https://tntenders.gov.in/ என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். ஒப்​பந்​தப்​புள்​ளி​களை நவ.3-ம் தேதி காலை 11 மணி வரை இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். அன்​றைய தினம் மதி​யம் 12.30-க்கு ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் திறக்​கப்​படும்.

இதற்​கான முன்​வைப்​புத் தொகை ரூ.23,000 ஆகும். ஒப்​பந்​தத்​தில் பங்​கேற்​கும் ஆலோ​சனை நிறு​வனங்​கள், கடந்த 7 ஆண்​டு​களில் குறைந்​த​ பட்​சம் ஒரு ஆற்​றங்​கரை மேம்​பாட்​டுத் திட்​டத்​துக்​கான விரி​வான திட்ட அறிக்​கை​யைத் தயாரித்த அனுபவம் இருக்க வேண்​டும்.

மேலும் நிறு​வனங்​களைத் தேர்வு செய்​வ​தில் தொழில்​நுட்ப மதிப்​பீட்​டில் குறைந்​த​பட்​சம் 75 சதவீத மதிப்​பெண்​களைப் பெறும் நிறு​வனங்​கள் மட்​டுமே பரிசீலிக்​கப்​படும்.

இந்​தத் திட்ட அறிக்​கை​யின் மூலம் மேம்​பாட்​டுப் பணி​களுக்​கான வடிவ​மைப்​பு​கள், செலவு மதிப்​பீடு​கள் மற்​றும் செய​லாக்க வழி​முறை​கள் இறுதி செய்​யப்​படும். இதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்​டப் பணி​களைத் தொடங்​கு​வதற்​கான நடவடிக்​கைகள்​ மேற்​கொள்​ளப்​படும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.