யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை வெள்ளிக்கிழமை (19) நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதித்து இருந்து.
அந்நிலையில் புதைகுழியை பார்வையிட வரும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்மணி புதைகுழி : நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space