செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாளான இன்றைய (4) பணிகளின்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மூலம் மூன்று கட்டங்களிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 279 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், எலும்புக்கூடு இலக்கங்கள் 266 மற்றும் 261 ஆகியவற்றுடன் தொடர்புடைய மனித எச்சக் குவியலில் இன்று (4) புதிதாக இலக்கம் இடப்பட்ட 274ஆம் எலும்புக்கூட்டுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.
இன்றைய அகழ்வில் இரு சிசுக்களின் எலும்புக்கூடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழி : மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space