ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது!
Ad Space
Ad Space
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 07 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
இக்கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space