ஜனாதிபதி விருது பொற்றுக் கொண்ட போதை பொருள் ஒழிப்பு பிரிவினர்  போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு எனது பதவி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோடிக்கணக்கில் போதை பொருள்கள் நாகொடிக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.எனது ஆட்சிக் காலத்திலேயே அதிகம்  போதை பொருள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்து அழிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் அவர்களின் சேவையை பாராட்டி ஜனாதிபதி விருதும் என்னால் வழங்கப்பட்டன. ஆனால் பின்னர் அவர்களும் போதை மாப்பியாக்களுடன் தொடர்பை பேணி போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டன. ஜனாதிபதி விருதி என்பது மக்கள் மத்தியில் மதிக்கப்படும் ஒரு விருதாகும்.மக்களுக்காக பாரிய சேவை செய்தவர்களுக்கே அவ்வாறான விருதுள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி விருது பெற்ற நாகொடிக் அதிகாரிகள் போதை பொருள் கடத்தினர்: மைத்திரி சொன்ன திடுக்கிடும் தகவல்கள்… | Maithripala Sirisena Narkotik Police Sri Lanka மதிப்புக்குரிய விருதுகளை பெறுபவர்கள் தங்கள் நடத்தைகளிலும் தவறிழைக்காதவர்களாக இருக்க வேண்டும். நாம் அவ்வாறான விருதுகள் பெற்றுக் கொண்ட பின்னராவது அதை உணர்ந்து பொது வெளியில் மதிக்கப்படுபவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.