ஜூலை 27-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில், அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
உடனடியாக இக்கடையை மூட தவெக அரசை வலியுறுத்தி, அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், வரும் 27-ம் தேதி, மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் என்.டி. பட்டேல் சாலை, அம்மா உணவகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சியின் அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
Ad Space
Ad Space