ஜெர்மனியின் பிரேமன் நகரில் 125வது ஆசிய - பசுபிக் வர்த்தக சங்க விழா
Ad Space
Ad Space
ஜெர்மனியின் பிரேமன் நகரில் உள்ள ஆசிய - பசுபிக் வர்த்தக சங்கத்தின் கிளை தனது 125-வது ஆண்டு நிறைவு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஆசியப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிதியாகவும், முதன்மை உரையாளராகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஆசியாவின் சார்பாக தானும், ஜெர்மனியின் சார்பாக அந்த நாட்டு கூட்டாட்சி வெளிவிவகார அமைச்சர் ஜோஹன் வடேபுல்லும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு உரையாற்றினோம்.
இந்த விழாவானது, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமான பிரேமன் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
பிரேமன் நகர மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட்டின் அழைப்பின் பேரில், சென்ற அமைச்சர், ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து பிரேமன் சுதந்திர ஹன்சீடிக் நகரத்தின் "தங்கப் புத்தகத்தில்" கையொப்பமிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தொடர்ந்து, மேல் நகர மண்டபத்தில் நடைபெற்ற விசேட விருந்துபசார நிகழ்வில் சுமார் 350க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
ஆசியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space