ஜெர்மனி மாநிலத் தேர்தல்களுக்கு முன்னர் ரஷ்யாவின் போலிப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை
Ad Space
Ad Space
ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பொய்ப் பிரசாரங்கள் மற்றும் தவறானத் தகவல் பரப்பும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
இந்த போலித் தகவல் பிரசாரங்கள் பிரதானமாக ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளான சி.டி.யூ, எஸ்.பி.டி, கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் சீரமைக்க உறுதிபூண்டுள்ள தீவிர வலதுசாரி AfD கட்சிக்கு ஆதரவாக இந்த நகர்வுகள் அமையக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
"மாட்ரியோஷ்கா" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரசாரப் பொறிமுறை குறித்து ஜெர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிபிசி மற்றும் ஏஆர்டி போன்ற புகழ்பெற்ற ஊடகங்களின் போலிச் சின்னங்களைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள் மீதான தவறான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
Ad Space
Ad Space