முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கொழும்பு 2, லில்லி வீதியில் அமைந்துள்ள 'சிட்டி ஹோட்டல்' எனும் நட்சத்திர ஹோட்டலை பொலிஸார் சுற்றிவளைத்து விசேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அந்த ஹோட்டலில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினரால் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 6 சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் சோதனை நடத்தப்பட்டபோதிலும், எவ்வித சட்டவிரோத பொருட்களோ அல்லது நடவடிக்கைகளோ கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான ஹோட்டலில் காவல் துறை சோதனை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space