பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, அவரது காவி உடைகளைக் களைந்து சிறைச்சாலைச் சீருடை அணிவித்த சிறைச்சாலைத் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (07) புதன்கிழமை கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் அதி.வண. பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தலைமையிலான குழுவினரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.