கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும், அவரது அலுவலக வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று திங்கட்கிழமை (19.10.2026)  பல மணி நேரமாகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திடீரென நடாத்தப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கை யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.        

இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவர் சார்ந்த ஈபிடிபி அமைப்பினர் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.