டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி
Ad Space
Ad Space
இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமென 'டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை' தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துரைத்திருக்கும் அரசாங்கம், தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் வழிகாட்டல்களை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட அதிகாரங்களைக் கொண்ட புதிய கட்டமைப்புக்கள் அவசியமாகின்றன எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி டிஜிட்டல் பொருளாதார சட்ட முன்மொழிவின் மூலம் தொழில்நுட்ப நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட்டு, அதனூடாக டிஜிட்டல் பொருளாதார நிபுணர்கள் உள்ளீர்க்கப்படுவர் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டின் டிஜிட்டல் மேம்பாட்டு முயற்சிகளில் தனியார் துறையினரின் தொடர்ச்சியான பங்களிப்பு மிக அவசியம் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Ad Space
Ad Space