'டித்வா' சூறாவளி குறித்த நாடாளுமன்ற விசேட குழுவிற்கு மேலும் உறுப்பினர்கள் நியமனம்!
Ad Space
Ad Space
'டித்வா' சூறாவளியை எதிர்கொள்வதற்கு போதிய தயார்நிலை இல்லாமை குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நிறுவப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவிற்கு மேலும் பல உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகரினால் இன்று வியாழக்கிழமை (05) நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அதற்கமைய, பிரசன்ன குணசேன, என்டன் ஜயக்கொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகிணி குமாரி விஜேரத்ன, எம்.கே.எம். அஸ்லம், அனுஷ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசேட குழுவின் தலைவராக நளிந்த ஜயதிஸ்ஸ செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space