கொழும்பு - மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 826 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாய் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளவத்தை மற்றும் வாரியபொல பகுதிகளை சேர்ந்த 23 மற்றும் 61 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space