வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (26) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space