தமன பகுதியில் புதையல் தோண்டியவர் கைது
Ad Space
Ad Space
தொல்பொருள் புதையல்களைத் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்த 42 வயதுடைய நபரொருவர் தமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்பிட்டியாவ பகுதியிலேயே இச்சட்டவிரோத புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் எனப் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தமன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space