தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (04.11.2026) காலை-09.30 மணியளவில் கொழும்பு-01 இலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுப் பணியகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவரது முகநூலில் விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படத்தைப் பதிவேற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்டே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள சுரேஸின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இதுதொடர்பான அழைப்புக் கட்டளையை நேரடியாக வழங்கியுள்ளனர்.