தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பதுளுவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து இங்கிநியாகல குளத்தில் மீன்பிடிக்கச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக காட்டு யானையினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தம்பகல்லவில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space