வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை பெய்த கனமழை காரணமாக தம்பலாகாமம் கோயிலடி பகுதியில் உள்ள சில வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளது. இதனால் ஓரிரு குடும்பங்கள் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

திடீரெனப் பெய்த கனமழையினால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பருவப்பெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாழ் நிலப்பகுதிகள் இதனால் நீரில் மூழ்கியுள்ளன.

மழைநீர் வீடுகளுக்குள் புகுவதைத் தடுப்பதற்கும், சீரான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்துகின்றது. ஏன் எனில் தொடர்ந்தும் குறித்த கோயிலடி பகுதி மக்கள் மழை கால வெள்ள அனர்த்தங்களின் போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.