ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு திங்கட்கிழமை (10) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வணக்கத்திற்குரிய மஹிந்த நாயக்க தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றார்.
ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம் என்பவற்றின் பொறுப்பாளர் , தம்புள்ளை சிரி வளகம்பா மஹா பிரிவேனாவின் பரிவேனாதிபதி போன்றவர்களையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே. சுமித் மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஜாலிய ஓபாத உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நாமல் ராஜபக்ஷ!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space