தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Ad Space
Ad Space
2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் அவசியமான ஏனைய மதிப்பீட்டுச் செயற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எவ்வித தாமதமுமின்றி பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று திணைக்களம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space