தலங்கம மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருள் வேட்டை: இருவர் கைது!
Ad Space
Ad Space
தலங்கம - புஸ்ஸெல்ல பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினரால் நடத்தப்பட்ட சோதனையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 400 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 320,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவளை பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்;கப்படுகிறது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சுமார் 113 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 207,200 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏறாவூர் 03 பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space