மத்தல ஸ்ரீ அங்கீரச சர்வதேச பௌத்த மத்தியஸ்தாளத்தில் நடைபெறவுள்ள பொசன் பௌத்த கலைவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, தாய்லாந்திலிருந்து 32 பேர் அடங்கிய உயர்மட்ட பௌத்த தூதுக்குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தத் தூதுக்குழுவில் தாய்லாந்து மன்னரின் ஆலோசகர் ஒருவர், அந்த நாட்டின் முன்னணி காப்புறுதி மற்றும் பழ உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தாய்லாந்து வர்த்தக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நாளை சனிக்கிழமை (27) முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மத்தல ஸ்ரீ அங்கீரச சர்வதேச பௌத்த மத்தியஸ்தளத்தில் நடைபெறவுள்ள பொசன் உற்சவத்திலும், விசேட பூசையிலும் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்காக தாய்லாந்திலிருந்து விசேட வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பெருமளவிலான அன்பளிப்புப் பொருட்களையும் அவர்கள் இலங்கைக்கு எடுத்து வந்துள்ளனர்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ருடு-403 என்ற விமானம் மூலம் இன்று காலை 9.10 மணியளவில் இக்குழுவினர் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை வரவேற்பதற்காக நெல்லிகல சர்வதேச பௌத்த மத்தியஸ்தாளத்தைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர், பிரமுகர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தாய்லாந்து நாட்டவர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Beaches & Islands
தாய்லாந்திலிருந்து 32 பேர் அடங்கிய உயர்மட்ட பௌத்த தூதுக்குழுவினர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space