பண்டாரவளை பிரதான பஸ் நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புதன்கிழமை (25) அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட பஸ், வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான மொனராகலை – பண்டாரவளை சேவையில் இயங்கிய பஸ் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பஸ் வழக்கம் போல மொனராகலையில் இருந்து பண்டாரவளைக்கு வந்து, இரவு முழுவதும் பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இன்று புதன்கிழமை (25) காலை 6.45 மணியளவில் சேவையை ஆரம்பிக்க சாரதி வந்தபோது, பஸ் காணாமல் போனதை கவனித்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த பஸ் தியத்தலாவை – வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.