ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வவுனியாவில் திங்கட்கிழமை (28)பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டமும், பேரணியும் இடம்பெற்றிருந்தது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு பேரணயானது, வவுனியா பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.






