தெமட்டகொடையில் 39 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
Ad Space
Ad Space
தெமட்டகொட பகுதியில் வியாழக்கிழமை (21) 39 கிலோ ஐஸ் மற்றும் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தெமட்டகொட பகுதியில் உள்ள கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Ad Space
Ad Space