தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவில் தற்போது அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குருதித் தட்டுப்பாட்டின் காரணமாகப் புற்று நோயாளர்களுக்கு குருதி விநியோகிப்பதில் சிரமமான நிலை உருவாகியுள்ளது . ஆகவே, குருதிக் கொடை வழங்க ஆர்வமுள்ள அனைவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவுக்கு நேரடியாக வந்து குருதிக் கொடை வழங்கி உயிர் காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் கேட்டுள்ளனர்.