தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நேற்று வியாழக்கிழமை (26.11.2026) யாழ்.உரும்பிராயிலுள்ள தியாகி பொன். சிவகுமாரனின் உருவச் சிலையடியில் பொங்கல் பொங்கி, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் கோப்பாய்த் தொகுதி அமைப்பாளர் பரமானந்தம் பிரகலாதன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், வீதியால் பயணித்த மாணவர்கள், பொதுமக்களுக்கும் கேக், பொங்கல் என்பன பரிமாறப்பட்டன.