டெங்கு பரவல் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நுளம்பகளை பட்டுபடுத்துவதுக்கான திட்டங்களை வகுப்பதோடு, வைத்தியசாலை கட்டமைப்புகளைத் தயார்படுத்துமாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் திங்கட்கிழமை (15) அமைச்சில் நடைபெற்றது. திங்கட்கிழமை முதல் (15) முதல் ஜூன் 20 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய 14 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினரை அழைத்து, பொதுநிர்வாக அமைச்சின் ஒருங்கிணைப்புடன் அவசர கலந்துறையாடல் ஒன்றை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு ஒழிப்புத் திட்டங்களை பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதன் அவசியம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறும், வைத்தியசாலை கட்டமைப்புகளைத் தயார்படுத்த வேண்டும் என்றார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space