சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கும் 3 ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும் 2024 செப்டம்பரில் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்ற நிலையில் 2024 நவம்பர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது .  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத்திட்டமான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வியாழக்கிழமை நிகழ்த்தப்படவுள்ளநிலையில் நேற்றைய தினம் ஒட்டுமொத்த பாராளுமன்றக் கட்டடமும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் இன்றைய தினம் பொதுமக்கள் கலரி விசேட அதிதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 992,77 கோடியே 3,388,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4 இலட்சத்து 43,435 கோடியே 6,468,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 55,841 கோடியே 6,920,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான இந்த செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு-பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்களுக்காக 68,850 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2027ஆம் ஆண்டுக்காக 4,050 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவினத்திற்குமாக மொத்தம் 135,205 கோடியே 6,814,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 1,137 கோடியே 7980,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2027ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக 1,120 கோடியே 3,814,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2026 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 17 கோடியே 4,166,000 ரூபா குறைவாகும்.

பிரதமருக்கான செலவினமாக 2026 ஆம் ஆண்டு 97,50,00,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 102 கோடியே 2,100,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2026ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 47 கோடியே 100,000 ரூபா அதிகமானதாகும் .

அதேபோன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 1,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு 143 கோடியே 7,000,000 ரூபாவும் இந்து சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு 33 கோடியே 700,0000 ரூபாவும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு 24கோடியே 1,500,000 ரூபாவும் கிறிஸ்தவ சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு 21 கோடியே 3,000,000 ரூபாவும் அதேவேளை தொல் பொருளியல் திணைக்களத்திற்கு 347 கோடியே 1,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 85,685 கோடியே 3,000,000 ரூபாவும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 65,100 கோடி ரூபாவும் மாகாணசபைகளுக்கென தனியாக 65,995 கோடி ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 45,800 கோடி ரூபாவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 59,049 கோடியே 9,998,000 ரூபாவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 50,000 கோடி ரூபாவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 32,800 கோடிரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2,180 கோடி ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 3,020 கோடி ரூபாவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு 8,230 கோடிரூபாவும் நீதி மற்றும் தேசிய கோடி ரூபாவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 7,980 கோடி ரூபாவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2,600 கோடி ரூபாவும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 1,170 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சுக்கு 2,120 கோடி ரூபாவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2,000 கோடிரூபாவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 370 கோடி ரூபாவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 2,600 கோடி ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு 23,050 கோடிரூபாவும் தொழில் அமைச்சுக்கு 750 கோடி ரூபாவும் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 1,700 கோடிரூபாவும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கு 1,510 கோடி ரூபாவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 760 கோடி ரூபாவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 340 கோடி ரூபாவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு 2470 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது

2027 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கு 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விவாதம் இடம் பெற்று இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 20 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறும் குழுநிலை விவாதத்திற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 21 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் விவாதம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெற்று அன்றையதினம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.