தேர்தல் முடிவுகளை முழுமனதுடன் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் நேற்று (3) மாலை தொடங்கி இன்று (4)அதிகாலை வரை நடந்தேறியது.

அதனையடுத்து, வாக்குகள் விரைவாக எண்ணப்பட்டு, தற்போது ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின் நிற்பதோடு, ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிக்கிறது. 

முடிவுகள் வெளியாகி வரும் இச்சந்தர்ப்பத்தில், “அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளை முழுமனதுடன் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இம்முறை நடைபெறுகின்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்த ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி செனட் சபை அதிகாரத்தை கைப்பற்றத் தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.