தொடருந்து மோதி முதியவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
காலியில் அம்பலாங்கொடை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார்.
இது தொடர்பில் அம்பலாங்கொடை காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space