தொடுவாவ பகுதியில் பீடி இலைகள், சிகரெட்டுகளுடன் இருவர் கைது
Ad Space
Ad Space
புத்தளம் தொடுவாவ பகுதியில் 992 கிலோ 800 கிராம் பீடி இலைகள் அடங்கிய 25 சாக்குப் பைகள், 140,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் படகு ஆகியவற்றுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரையோர காவல்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தொடுவாவ தொடுவாவ கரையோரம் சனிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரி திணைக்களத்தின் சிலாபம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Ad Space
Ad Space