பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கத்தின் 45 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை ( 21.11.2026) காலை-08.45 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைச் சிரேஷ்ட பேராசிரியரும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனர்களில் ஒருவருமான கே.ரி.கணேசலிங்கம் தலைமையில் நடைபெறும்.
காலை-09 மணியளவில் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெறும். மேற்படி நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்ஸன் ஒருங்கிணைந்த அரசியலின் முக்கியத்துவமும் எதிர்காலமும் எனும் தலைப்பிலும், சமூக ஆய்வாளர் தி.மதுசூதனன் சமகால நெருக்கடிகளும் அவற்றை ஒரு சமூகமாக எதிர்கொள்வது எப்படி? எனும் தலைப்பிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைப் பேராசிரியர்- எம்.எம்.பெளசர் சமகால அரசியலில் ஈழத்தமிழரும் இலங்கை முஸ்லிம்களும் எனும் தலைப்பிலும், ஆசிரியரும், மலையகத் தொழிற்சங்கப் பிரதிநிதியுமான வேலு இந்திரச்செல்வன் மலையக மக்களின் சமகால அரசியல் எனும் தலைப்பிலும் நினைவுப் பேருரைகள் நிகழ்த்துவர்.