நல்லூர்க் கந்தசுவாமி பெருந் திருவிழாவை முன்னிட்டுப் பந்தல்கால் நாட்டி வைப்பு: காளாஞ்சியும் கையளிப்பு
Ad Space
Ad Space
வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வும் பாரம்பரியமாகக் கொடிச் சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (07.08.2026) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்று காலை-07.30 மணியளவில் வள்ளியம்மைத் திருக்கல்யாணப் படிப்புடன் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயச் சூழலில் பந்தல்கால் நாட்டப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சியும், பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கல்வியங்காட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கையளிக்கப்பட்டன.
Ad Space
Ad Space