நல்லூர்ப் பிரதேச சபையின் 12 வட்டாரங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட வாழ்வாதார உதவிகள் இன்று வியாழக்கிழமை (12.11.2026) நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

நல்லூர்ப் பிரதேச சபையின் வரியிறுப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதன் முதற்கட்டமாகச் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்துக் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழி வளர்ப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கோழி வளர்ப்பின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குக் கோழிக் கூடுகளும், கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.