நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்துக்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று புதன்கிழமை (4) காங்கேசன்துறை பகுதியில் உள்ள “சுபம்” கப்பல் சேவை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தக் கப்பல் சேவையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக இதன்போது தெரிவிக்கப்பட்டதாவது : 

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்கும் இரு வழித்தடங்களிலும் கப்பல் பயணக் கட்டணம், இந்திய மதிப்பின்படி, ₹5,500ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதுவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

 

30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் (இந்திய மதிப்பின்படி) வசூலிக்கப்படுகின்றன: 

  •    5 கிலோ : ₹1,500 (LKR 5,250 / USD 16)
  •    10 கிலோ : ₹2,500 (LKR 8,750 / USD 26)
  •    30 கிலோ : ₹6,000 (LKR 21,000 / USD 63)

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம். அதன்படி, இந்திய நாணய மதிப்பின் அடிப்படையில் கப்பல் சேவைக்கான கட்டணங்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. 

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை (Economy):

  •    பெரியவர்கள் (Adult): ₹5,500 | LKR 19,250 | USD 58
  •    குழந்தைகள் (Child): ₹5,000 | LKR 17,500 | USD 53

 

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco):

  •    Economy - பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
  •     Economy - குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
  •     Pre Eco - பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64
  •    Pre Eco - குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58

நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் கடந்த வருடம் போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.