நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான கிரிஷ் மோசடி வழக்கு நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
Ad Space
Ad Space
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (7) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் நடைமுறையின்படி, இவ்வழக்கில் இரண்டு இந்திய பிரஜைகளான சாட்சிகளுக்கும் அழைப்பாணைகளை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர், இவ்வழக்கை நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Ad Space
Ad Space