2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 4,992 பில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டிற்காக நாளை மறுதினம் (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 856.9 பில்லியன் ரூபா, பொது நிர்வாகம்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு 651.0 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு 590.5 பில்லியன் ரூபா,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 500 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 458.0 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் முக்கிய அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இலங்கை வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டை மாற்றியமைப்பதற்கு சுமார் 2000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சரான ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டின் தற்போதைய மூலதனச் செலவீனத்தை 4 சதவீதத்தில் இருந்து அதிகரித்து, அதேவேளை நடப்புச் செலவினத்தை 9 சதவீதத்தில் இருந்து குறைத்து அபிவிருத்தி திட்டங்களை அவற்றை பயன்படுத்த 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டிற்காக நாளை மறுதினம் (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கஇ எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து விசேட உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளத. இதற்கமையஇ நவம்பர் 20ஆம் திகதி இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்துஇ நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்குக் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.