நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், கடந்த 17 ஆம் திகதி தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த போதே, குறித்த பெண் தொழிலாளியை பாம்பு தீண்டியுள்ளது.
உடனடியாக அவருடன் பணிபுரிந்த ஏனைய பெண் தொழிலாளர்கள், அவரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போதும் இடை நடுவே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண்னின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாவலப்பிட்டி பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space