நிட்டம்புவவில் இனந்தெரியாத முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு!
Ad Space
Ad Space
நிட்டம்புவ - ரணவிருகம சந்திக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 60 முதல் 65 வயதுடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 5 அடி 3 அங்குல உயரமுடைய இவர், வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட சாரத்தை அணிந்திருந்ததுடன், முகம் முழுவதும் தாடி வளர்ந்துள்ளதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space