நிபந்தனைகளை மீறினால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Ad Space
Ad Space
எதிர்வரும் மே மாதத்தில் மூன்று நாட்கள் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வைகாசி (வெசாக்) விசாக பூரணையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகளை மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மே 01 அன்று வரும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளிலும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பெமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், உரிம நிபந்தனைகளை மீறும் இடங்கள் அல்லது சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்கும் இடங்கள் குறித்து திணைக்களத்தின் 1913 என்ற எண்ணுக்குத் தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Ad Space
Ad Space