நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வானுஷி வோல்டர்ஸை சந்தித்தார் விஜித்த ஹேரத்
Ad Space
Ad Space
நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், இருதரப்பு விவகாரங்கள் பலவற்றைப் பற்றி தாங்கள் இருவரும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இலங்கையின் பொருளாதாரம் குறித்து அவரிடம் தாம் விளக்கியதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
"வானுஷி வோல்டர்ஸ் தனது இலங்கை பூர்வீகம் குறித்தும், நியூசிலாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்" என்றும் அமைச்சர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Ad Space
Ad Space