நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி பேராதனை பல்கலை மாணவர்களின் பேரணி
Ad Space
Ad Space
பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் நலவசதிகள் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (26) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் ஆரம்பமான இந்த போராட்ட பேரணியால், பேராதனையிலிருந்து கம்பளை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு வழிப் போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ad Space
Ad Space