நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை என்றால், அது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்திற்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் வெளிப்படைத்தன்மை, பொது கலந்துரையாடல் மற்றும் சட்டபூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, நீதித்துறையின் சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயங்களில் இரகசியமாக அல்லது போதிய ஆலோசனையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்தையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்றும், இரகசியமான அரசியலமைப்பு திருத்தங்கள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார்.
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க இரகசிய அரசியலமைப்பு திருத்தம் ?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space