நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் : 16 பேர் காயம்!
Ad Space
Ad Space
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைத்துக் கைதிகளும் உடனடியாக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இந்த வன்முறைச் சம்பவம் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space