நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோதல் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக பதவி உயர்வும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space