தாக்குதலில் காயமடைந்த நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு நகர சபை உறுப்பினரை தாக்கிய முச்சக்கரவண்டி சாரதி கைது!
Ad Space
Ad Space
நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினர் வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது முச்சக்கரவண்டி சாரதி, நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Ad Space
Ad Space