யாழ் சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச்சென்ற 44வயதான குருநகர் ( இராயசிங்கம் வீதி )யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரினால் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
நுணாவில் சந்தி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space